எறும்புகள் என்பது பாலா பிள்ளை அவர்களின் எண்ணக்குப்பங்கள் எனப்படும் அரிய கண்டுபிடிப்பை செம்மைப்படுத்தும் முயற்சி.
எண்ணக்குப்பங்கள் என்பதனை எறும்புப்புற்றுகளுக்கு ஒப்பாக வைத்துப்பாருங்கள். அல்லது எல்லைகளில்லாத கிராமங்களை நினைத்துப்பாருங்கள்.
பகுப்பாய்வு மொழியில் கூறினால், எண்ணக்குப்பங்கள் என்பன ஆற்றல் பொருந்திய, தன்னிறைவு பெற்ற, பல்வேறு ஊடகங்களால் இணைக்கப்பட்ட எண்ணங்களின் கூட்டுறவு ஆகும். இது ஒத்த விருப்பங்கள் உடையவர்களால் பின்னப்பட்டது. எறும்புகளுக்கு உணவு, உறைவிடம், தண்ணீர் பிரச்சினை இல்லை. நமக்கு ஏன்? எறும்புகளுக்கு அரசாங்கமோ, சேவை நிறுவனங்களோ, பள்ளிகளோ, ஊடகங்களோ, வங்கிகளோ இல்லை. நமக்கு இவை எல்லாம் இருந்தும் நாம் உணவு, உடை,உறைவிடத்திற்குக் கவலைப்படுகிறோம். ஏன்? என்பதைக் கீழே கவனியுங்கள்.
நம்முடைய வெற்றிக்கு அடிப்படை நாம் எவ்வாறு மற்றவர்களுடன் உறவை ஏற்படுத்திக்கொள்கிறோம்(அ), நம்முடைய மூளையை எவ்வாறு பயன்படுத்திகிறோம்(ஆ) என்பதில்தான் இருக்கிறது.
எண்ணக்குப்பங்கள் மூலமாக நம்மை எப்படி வளர்த்துக்கொள்ளலாம் என்பதை(அ மற்றும் ஆ மூலமாக) கற்றுக்கொள்ளுங்கள்.
முதலில் உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள் இங்கேWikiSandbox அங்கே உங்கள் விருப்பங்களை இடுங்கள். நீங்கள் அமைக்க விரும்பும் எண்ணக்குப்பங்கள் இங்கே இல்லையென்றால், அதைத்தெரிவியுங்கள். நாங்கள் உங்களுக்கான குழுமங்களைத்தொடங்குவதற்கான வழிமுறைகளைத்தருகிறோம். இல்லையேல் இங்கேயுள்ள குழுமங்களில் சேர்ந்து உடனே பணிபுரியத்தொடங்குங்கள்.

